ஒப்புதல்அட்டையுடன் பதிவு அஞ்சல்
விடுநர் :
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது
பங்களாபட்டி ரோடு
வடகரை. பெரியகுளம்.
தேனி மாவட்டம்.
9345562420
பெறுநர் :
1.திரு. கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்
பூம்பாறை கிராமம் கொடைக்கானல்.
2. திரு. கோபாலகிருஷ்ணன்.ME., அவர்கள், பூம்பாறை கிராம பஞ்சாயத்து தலைவர், பூம்பாறை.
ஐயா
பொருள்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காண முடியாமல் இருக்கும் பூம்பாறை கிராம சர்வே எண் 331/5 ல் ஆரம்பித்து 335 வரை செல்லும் சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக ...
பார்வை:
1. 23/08/2024 ம் தேதி நடந்த மக்களுடன் முதல்வர் முகாம் மனு என்.MMCR/9896197 க்கு கொடைக்கானல் வட்டாட்சியர் தபால் .ந.க.எண்.2166/2024-46/ஆ1.தேதி: 27/09/2024.
2. 24/11/1999 தேதி கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவு( MC No.4/1999 ...ந.க.என்.1787/1999/A - 5 )
பூம்பாறை கிராம முன்னால் பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் சேர்வை மற்றும் நாள்வர் பொருளில் கண்ட சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரியாகிய தாங்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கொடைக்கானல் வட்டாட்சியர், தபால் ந.க.எண்.2166/2024-46/ஆ1.தேதி: 27/09/2024. ன். .அறிவுறுத்தலின்படி சென்ற 7/10/2024 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்து,மாவட்ட கண்காணிப்பாளரின் அறிவுரையின்படி 11/10/2024 தேதி மாலை 6 மணி அளவில் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து எனது குறைகளை எடுத்துக் கூறினேன்.
மேற்கண்ட பிரச்சினைகளை சுமுகமான தீர்வு காணவும் குறிப்பாக பூம்பாறை கிராமம் "மாதாரி" தெருவில் இருக்கும் லேட் ஆட்டுக்கார வேலன் மகள் அழகம்மாள் மற்றும் அவருடைய கணவன் ரத்தினம் தம்பதியரை கைப்பாவையாக வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் என்னை சிக்க வைத்து எனது நடவடிக்கைகளை முடக்க எதிர்த்தரப்பினர் விரித்திருக்கும் வளையில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக பூம்பாறை கிராமத்தில் ஒரு பொது இடத்தில் தாங்கள் இருவரின் முன்னிலையில் பொதுமக்களை சந்தித்து ஆலோசனை கேட்க உள்ளேன்.
ஒரு குற்றம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் நடப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.
இதன் அடிப்படையில் தங்களுக்கு எப்போது நேரத்தை ஒதுக்க முடியும் என்ற தகவலை தாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து, எனக்கு தெரியப்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அரங்கேறும் செயல்பாடுகளை எனது கைபேசியில் படம் பிடிக்கவும் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பகிரவும் அனுமதி வேண்டுகிறேன்.
இப்படிக்கு
தங்கள் பணிவுள்ள,
எஸ் முஹம்மது(16/10/2024 )
Copy to
1. வட்டாட்சியர் கொடைக்கானல்
2.வட்டார வளர்ச்சி அதிகாரி கொடைக்கானல்
3.காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்
கொடைக்கானல் சரகம் கொடைக்கானல்.
இனைப்பு :
கொடைக்கானல் வட்டாட்சியர் தபால் .ந.க.எண்.2166/2024-46/ஆ1.
தேதி: 27/09/2024.
பின்குறிப்பு :
நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
1.https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL
2.https://youtube.com/@hajishemd?si=acT0zR6hc3cskekX
3.https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL
( Litigation )
4. https://chat.whatsapp.com/E9nMonQNDC605Va3G4vNvd
( அறம்பாடுதல்)
5.http://kodaikanalpropertyshop.blogspot.com/?m=1
No comments:
Post a Comment