Friday, October 4, 2024

LITIGATION – 1. PUTHUKOTTAI VILLAGE 8.87 Acres Periyakulam Theni Dt.

Releasing Property Litigation Campaign 2024.
LITIGATION – 1. PUTHUKOTTAI VILLAGE 8.87 Acres Periyakulam Theni Dt.

பெரியகுளம் டவுன் தென்கரையிள் வசித்து வரும் லேட். கோவிந்த தொண்டமான் அவர்கள் குமாரர் எம் ஜி ராஜா - 1, பெரியகுளம் கும்பக்கரை சாலை புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் லேட் பிரவான் அவர்கள் குமாரர் காசையா - 2   ஆகிய இருவருக்கும், 

பெரியகுளம் பங்களாப்பட்டி ரோட்டில் வசித்து வரும்  எஸ். கே .சேக் முகம்மது ராவுத்தர் மகன் எஸ் முகமது ஆகிய நான் கோரும்  வேண்டுகோள் என்னவென்றால் ,  

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா எண்டபுளி கிராமம் சர்வே எண் 1 ,2, 3 ,4 மற்றும் 5 ல் மொத்தம் 8 ஏக்கர் 87 சென்ட் நிலம் உங்களில் இரண்டாவது நபர் காசையா மற்றும் அவரின் சகோதரர்கள்  செல்வம், முருகன்,தங்கப்பாண்டி ஆகிய நான்கு நபர்களுக்கு  சொந்தமானது என்றும், மேற்கண்ட நிலத்தை 12/12/2012 ம் தேதிய கிரைய ஒப்பந்த ஆவன என் .3416/2012 படி நான் சுமார் 220 சென்ட் நிலத்தை  9 நபர்கள் பெயரில் முறைப்படி கிரையம் பதிந்து வாங்கி விட்ட நிலையில், எம். ஜி . ராஜாவாகிய தாங்களும் தாமரைக்குளம் முன்னாள் சேர்மனும் தங்களின் நண்பருமாகிய ராம தண்டபாணியும் சேர்ந்து நான் விற்க்காமல் இருந்த மீதி நிலத்தை கையகப்படுத்தி ராம தண்டபாணி தலைமையில் 66 சென்ட் நிலத்தை மட்டும் தங்களால் விற்க முடிந்தது என்றும், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரூபாய் ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகையாக என்னிடமிருந்து  பெற்றுக்கொண்டு தாங்களும்  நிலத்தின் சொந்தக்காரர்களும் சேர்ந்து ஒரு பதியப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கண்ட நிலத்தை விற்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள்  என்றும்,  நிலத்தின் சொந்தக்காரர்களில் இருவர் செய்த குளறுபடியாலும், தமிழக அரசின் அங்கீகாரம் இல்லா மனை விற்பனை தடை சட்டத்தாலும் விற்பனை நின்று போனது என்றும்,  ராம தண்டபாணி கந்து வட்டி காராகிய முருகன் என்ற நபரிடம் வாங்கிய கடனுக்காக அவரின் மான மரியாதையை காப்பாற்றுவதற்காக  மேற்கண்ட நிலத்தில் 1 ஏக்கர் 15 சென்ட்  நிலத்தை மேற்படி கந்துவட்டி முருகன் பெயரில் கிரையம்  பதிந்து கொடுக்கப்பட்டது என்பதையும் நாம் அனைவரும் மேற்கண்ட செயலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம் என்பதையும்  தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கந்துவட்டி முருகன் மற்றும் ராம தண்டபாணி ஆகிய  இருவர் பெயரிலும் நான் கொடுக்கும் புகார். 
தாங்கள் கசையா குடும்பத்தாரிடம்  எழுதிக் கொண்ட விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்து முருகனுக்கு 1  ஏக்கர் 15 சென்ட் நிலம் கிரையம் பதியும் சமயம் 12 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒரு லட்ச ரூபாய்க்கு பகரமாக, தண்டபாணி பெயரில்   இருக்கும்  நிலத்தில் 10 சென்ட்  நிலத்தை எனக்கு கிரையம் பதிந்து கொடுப்பதாக  வாக்களித்தீர்கள்.

மேற்கண்ட 10 சென்ட் நிலத்தை விற்று கடனை கட்டுவது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த 13/12/2023 அன்று தன்டபானி/ முருகனிடமிருந்து ரூ.65,000/- 15/4/2024 ம் தேதி ரூ.67,000/- ரொக்கம் பெற்று சென்ற 15/9/2024 வரை ரூ.1,15,000/ - வட்டியாக கட்டியுள்ளேன்.

மேற்கண்ட 10 சென்ட் நிலத்தையும் நான் கடன் வாங்கும் போது பொறுப்பிற்காக கொடுத்த புரோ நோட்டு மற்றும் எனது வீட்டின் அசல் அவனத்தையும் அவர்கள் கொடுக்கும் பட்சத்தில் நான் வாக்குறுதி கொடுத்தபடி ரூ.இரண்டு லட்சம் தங்கள்  சமூகம் கட்ட தயாராக இருக்கிறேன்.

எனது வேண்டுகோள்:
எந்த நீதி மன்றமும் எந்த உயர் அதிகாரியும் தீர்க்க முடியாத
மேலே கண்ட  பிரச்சனைக்கு  நீங்கள் இருவர் மட்டுமே தீர்வு கொடுக்க முடியும் என நம்புகிறேன்.காரணம்  கடந்த 12 ஆண்டுகளாக அரங்கேறிய அனைத்து நிகழ்வுகளை நீங்கள் இருவரும் நன்கு அறிந்தவர்கள்.  நல்ல முடிவை காலம் தாழ்த்தாமல் எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 
இப்படிக்கு

 எஸ் முஹம்மது 
பின்குறிப்பு : 
நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்,மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும்  அனைத்து நிகழ்வுகளையும்  தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 

1.  https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL
2.  https://www.instagram.com/naturecureparkpoombarai?igsh=MXhuYm56Njh5Z3U=
3. https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL
4. https://youtube.com/@hajishemd?si=uk_LDjDddE4D5QK3

No comments:

Post a Comment