அனைத்து பிரச்சனைகளையும் ஓரங்கட்டி விட்டு அதாவது இறைவன் தீர்ப்பில் விட்டு விட்டு அந்தரங்க தோட்டத்தில் நுழைதல் ..இதுவே 100 நாள் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம்.
இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் ? அந்தரங்க தோட்டத்தில் நுழைவதற்கு தடைக்கற்கள் என்னென்ன?
தடைகற்கள் :
1. எனக்கு எதிராக நானே உற்பத்தி பண்ணிய பிரச்சனைகள், முழுமையாக வெளிவர முடியாமல் பிரச்சனைகளில் மூழ்கிப் போய் வருடக் கணக்கில் திணறிக் கொண்டிருக்கிறேன்.
எனவே, பிரச்சினைகளின் முடிவு எப்படி இருந்தாலும் கவலை இல்லை ஓரங்கட்டி விடுவது என முடிவெடுத்து விட்டேன் .. ஆனால்,
சில பிரச்சினைகள் எதுவும் செய்யாமல் இருந்தால் தானாக சரியாகிவிடும். .ஆனால் என்னுடைய பிரச்சினைகள் "சிக்கல் விழுந்த நூல்கண்டு" .
ஒவ்வொரு முடிச்சாக நான் மட்டுமே அவிழ்க்க முடியும் ... நான் இல்லை என்றால் எனது வாரிசுகள் அந்த சிக்கல்கலை தீர்க்கவே முடியாது.
ஹதீஸ்:
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் கேட்டார் "இறைவன் மேல் பாரம் சாட்டி இந்த ஒட்டகத்தை இன்று இரவு மேய விட்டு விடவா ? " என்பதாக
அதற்கு எம்பெருமானார் "இறைவன் மேல் பாரம் சாட்டுங்கள் ஆனால் காலை கட்டி பிறகு மேய விடுங்கள் " என்பதாக.
எனது பிரச்சினைகளுக்கு நியாயமான ஒரு தீர்ப்பை ஏக இறைவன் வழங்குவான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை , ஆனால் ஒட்டகத்தின் காலை கட்டி மேய விடுவது கடமை. இது பெருமானாரின் அறிவுரை.
எனது பிரச்சினைகளை ஓரம் கட்டி விட்டு என்னுடைய அந்தரங்கத் தோட்டத்தில் நுழைவது என்பதிள் எந்த மாற்றமும் இல்லை . ஆனால் அந்தப் பிரச்சினையிள் எப்போதும் மூழ்கி இருப்பது இனிமேல் இல்லை ..வெளியேறிவிட்டேன்.
எனக்கு எதிராக நானே உற்பத்தி செய்து கொண்ட பிரச்சனைகளை துடைத்து எரிவதற்கான ஒரே ஆயுதம் எனது சமூக வலைத்தளங்கள் .. அதற்கான வழிமுறை தான் கீழே கண்ட இரண்டு செயல் திட்டங்கள்.
1. அறம் பாடி அளித்தல் தீமையை
2. Releasing Property litigation Campign.
Mohammed.. 9/10/24. 8.AM.
No comments:
Post a Comment